/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்
/
இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்
இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்
இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்
ADDED : ஏப் 22, 2025 11:50 PM
பெ.நா.பாளையம், ; கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மாவட்ட அளவில், 31.85 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கான ஆய்வு கூட்டங்களை அடிக்கடி நடத்தி, பணிகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் இறந்த வாக்காளர்கள் பலர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.
இதனால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதை தவிர்க்க, வட்டார அளவிலான தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு செய்து, சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து இறப்புச் சான்று பெற்றவர்களின் விபரங்களை சேகரித்து, அவற்றை கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதே போல மாவட்ட அளவில், இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்படும் சூழ்நிலையில், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கான திட்டங்களையும் வகுக்க முடியும் என, மாவட்ட நிர்வாகம், தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தி உள்ளது.