/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்சி பிரதிநிதிகளுடன் பேசிய பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
/
கட்சி பிரதிநிதிகளுடன் பேசிய பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
கட்சி பிரதிநிதிகளுடன் பேசிய பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
கட்சி பிரதிநிதிகளுடன் பேசிய பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
ADDED : டிச 05, 2025 07:19 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில் நாளை கட்சியினருடனான ஆலோசனை முடிந்த பின் வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்யும் பணிகள் துவங்கும்.
கோவையில் பத்து சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஆறு தொகுதிகளில் பணிகளில் நிறைவடைந்துள்ளன. நான்கு தொகுதிகளில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில் படிவங்களை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்கிறது. இறந்த வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இறப்பு சான்று கொடுத்திருப்போரை, தேர்தல் பிரிவினரால் நீக்க முடியவில்லை. இருப்பினும், அந்த குடும்பத்தினரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். மேலும் கட்சியினரின் ஒப்புதலை பெற்று காலமான வாக்காளர்களை நீக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் அன்றாடம் காணொளி வாயிலாக பணிகள் தொடர்பான முன்னேற்ற விவரங்களை கேட்டு வருகின்றனர். இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அது தொடர்பாக கட்சியினரை அழைத்து ஆலோசனை பெற முடிவு செய்துள்ளனர்.
”இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிப்பதற்கு முன் அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
''அதற்கான கூட்டம் தொகுதி வாரியாக சனிக்கிழமை நடத்தப்படும்” என கலெக்டர் பவன்குமார் கூறினார்.

