/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழா மக்களை கவர்ந்த நந்த கோவிந்தம் பஜனை

ADDED : டிச 26, 2025 05:05 AM

கோவை: ராம் நகர் சத்திய மூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தின், 75 வது பூஜா மஹோத்ஸவ விழாவில் பக்தர்களை கவர்ந்தது நந்த கோவிந்தம் பஜனை குழுவினரின் இசை.
அய்யப்பன் பூஜா சங்கத்தின் 75 வது பூஜா மஹோத்ஸவங்கள் டிச. 24 துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை 6 மணிக்கு கிராமபிரதக் ஷனம், மஹாசங்கல்பம், மஹன்யாச ருத்ரஜெபம், 10 மணிக்கு ஸ்ரீ ருத்ரஹோமம், 11:45 க்கு அன்னதானம், 12:30 க்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை 6:15 மணிக்கு கேரளாவின் புகழ் பெற்ற நந்தகோவிந்தம் பஜனைகுழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.இதை பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர். இன்று காலை 6:30 க்கு ஸ்ரீ நவசன்டி யக்ஞ மஹா சங்கல்பம்,7:30 க்கு ஸப்தஸதி பாராயணம் நடக்கிறது.
காலை 8 மணிக்கு ஸ்ரீ ஸீக்த ஹோமம், 9:30 க்கு ஸ்ரீ நவசண்டி ஹோமம், 11:45 க்கு அன்னதானம், 12:30 க்கு மஹாபூர்ணாஹூதி, மதியம் 1:30 க்கு மஹா தீபாராதனையும், மாலை 6:15 மணிக்கு காந்தார ஸ்ரீ சாய்விக்னேஷ் மற்றும் வினயா கார்த்திக் ராஜனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.