/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.பி. கல்லுாரியில் தேசிய வணிகவியல் மாநாடு
/
என்.ஜி.பி. கல்லுாரியில் தேசிய வணிகவியல் மாநாடு
ADDED : செப் 14, 2025 11:31 PM

கோவை; டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகம் மற்றும் மேலாண்மை துறை சார்பில், 'பணி 2030; தொழில்முனைவோரின் இதயம் மற்றும் மனிதவள மனம்' என்ற தலைப்பில், தேசிய மாநாடு நடந்தது.
சென்னை ஆரக்கிள் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆர் பிளன்டர்ஸ் இன் நிறுவனர் ராகுல் காமத், சீகர் ஸ்பின்டெக் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் துணை மேலாளர் மாருதி, கோவை லியோ டேப்ஸ் பிட்டிங்ஸ் நிர்வாக பங்குதாரர் பார்த்திபன் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலாளர் தவமணி தேவி, டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்வி இயக்குனர் முத்துசாமி, முதல்வர் சரவணன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.