/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய கார் சாம்பியன் பந்தயம்
/
கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய கார் சாம்பியன் பந்தயம்
கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய கார் சாம்பியன் பந்தயம்
கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய கார் சாம்பியன் பந்தயம்
ADDED : அக் 21, 2024 06:44 AM

போத்தனூர் : கோவையில் தேசிய அளவிலான கார் சாம்பியன் பந்தயம் நடந்தது.
போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் அருகே, கரி மோட்டார் ஸ்பீடு வேயில் ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ.. சார்பில், கடந்த 18ல் பந்தயம் துவங்கியது. எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் முதல் போட்டியில், தில்ஜித், துருவ் கோஸ்வாமி, திஜில் ராவ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
இரண்டாவது போட்டியில் அபய், திஜில்ராவ், சேத்தன் சுரினேனி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.
ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜி.டி.. கோப்பைக்கான முதல் போட்டியில் நவநீத் குமார், ரோகன், சூர்யா ஆகியோரும், இரண்டாவது போட்டியில் ரோகன், கயன்பட்டேல், நவநீத் குமார் ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மூன்றாவது போட்டியில் யோகேஷ், ஜோரிங் வரிஸா, பிரசாந்த் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர். போட்டி நேற்று நிறைவு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ., அலுவலர்கள் பரிசுகளை வழங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆண், பெண் வீரர்கள் பங்கேற்றனர்.

