/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய சாம்பியன் கார், பைக் பந்தயம்
/
தேசிய சாம்பியன் கார், பைக் பந்தயம்
ADDED : செப் 29, 2025 12:37 AM

போத்தனூர்; கோவையில் ஜே.கே.டயர் சார்பில், தேசிய சாம்பியனுக்கான கார் பந்தயத்தின் இரண்டாம் சுற்று நேற்று நிறைவடைந்தது.
போத்தனூர் அடுத்து செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நேற்று முன்தினம் பந்தயம் துவங்கியது. இதில் முதல் முறையாக மாருதி கார்களுக்கான லெவிடாஸ் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
10 லேப்கள் கொண்ட இப்பிரிவின் முதல் பந்தயத்தில், மிரா எர்டா, ராம்சரண். ஜெய் பிரசாந்த் வெங்கட் ஆகியோரும், இரண்டாம் பந்தயத்தில் மிரா எர்டா, ஜெய் பிரசாந்த் வெங்கட், நிதின் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மூன்றாவது பந்தயத்தில் திபாயன் தத்தா, ஜெய் பிரசாந்த் வெங்கட், மிரா எர்டா ஆகியோரும் நான்காவது போட்டியில் ஜெய் பிரசாந்த் வெங்கட், மிரா எர்டா மற்றும் நிதின் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர். ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான முதல், இரண்டாம் பந்தயங்களில் அனிஷ் ஷெட்டி, நவனீத்குமார் மற்றும் கயன்ஜுபின் பட்டேல் ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஜே.கே.டயர் நோவிஸ் கோப்பைக்கான முதல் பந்தயத்தில், புவன் போனு, வினித்குமார், அவி மாலவள்ளி ஆகியோரும், இரண்டாம் பந்தயத்தில் அபிஜித், புவன் போனு, லோகித் லிங்கேஷ் ரவி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஜே.கே. டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ. அதிகாரிகள் பரிசு வழங்கினர்.