ADDED : மே 14, 2025 11:48 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடையில் நாளை தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சார்பில் 'டெங்குவைத் தோற்கடிப்பதற்கான படிகள்' என்ற கருப்பொருள் வாயிலாக இத்தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறுகையில், டெங்கு என்பது நாடு முழுவதும் ஒரு பெரிய பொது சுகாதார கவலையாக தொடர்ந்து இருக்கும் ஒரு ஆர்போ வைரல் நோயாகும்.
எனவே, டெங்கு தின அனுசரிப்பின் போது நோய் சுமையைக் குறைப்பதற்கும், சமூகத்திற்கு பயனளிப்பதற்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் காரமடை வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும்.
காரமடை வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்படும், என்றார்.-----