/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; சுகுணாபுரம் அரசு பள்ளிக்கு பதக்கம்
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; சுகுணாபுரம் அரசு பள்ளிக்கு பதக்கம்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; சுகுணாபுரம் அரசு பள்ளிக்கு பதக்கம்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; சுகுணாபுரம் அரசு பள்ளிக்கு பதக்கம்
ADDED : பிப் 06, 2025 09:52 PM

கோவை; தேசிய சிலம்பம் போட்டியில் சுகுணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ., உள்ளரங்கில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி இரு நாட்கள் நடந்தது. அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் நடந்த போட்டியில், 22 மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், மூத்தோர் பிரிவு கம்புச்சண்டை மற்றும் மான் கொம்பு சுற்றும் போட்டியில், கோவை, சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், துரை ஆனந்த் தங்கமும், இளையோர் பிரிவு கம்பு சண்டையில் அபிமன்யு மற்றும் அஜய் ஆகியோர் தங்க பதக்கமும் வென்றனர்.
மாணவர் சாய்லேஷ் வெண்கல பதக்கமும், குழு ஆயுத வீச்சில் அஜய் மற்றும் சாய்லேஷ் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியை(பொ) சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் சேகர் ஆகியோர் பாராட்டினர்.