UPDATED : அக் 30, 2026 07:29 PM
ADDED : அக் 30, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
கோவை:
நேஷனல் மாடல் பள்ளி குழுமத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்வான ‘கேரியர் பாத் 2026’ தொடக்க விழா நடந்தது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீவித்யா மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் எதிர்காலக் கல்வித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் நோக்கில் நடத்தப்படும் இந்நிகழ்வில், 21-க்கும் மேற்பட்ட முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
31 சிறப்பு பேச்சாளர்கள் மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் 2,100க்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.
