/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த நேஷனல் மாடல் மாணவர்
/
நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த நேஷனல் மாடல் மாணவர்
நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த நேஷனல் மாடல் மாணவர்
நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த நேஷனல் மாடல் மாணவர்
ADDED : அக் 23, 2024 05:29 AM

கோவை : நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் அஹில் பாலாஜி சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டல நீச்சல் போட்டியில், பல பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.
நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி பிளஸ்1 மாணவர் அஹில் பாலாஜி, கிங்ஸ்டன் சர்வதேச பள்ளியில் நடந்த, சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டல நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார்.
இதில், 200 மீ., 'பட்டர் பிளை' பிரிவு மற்றும் 200 மீ., 'பேக் ஸ்ட்ரோக்'பிரிவில் இரு தங்க பதக்கங்களையும், 100 மீ., பட்டர் பிளை பிரிவு, 400 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தனிநபர், 200மீ., மெட்லே பிரிவில் ஒரு வெண்கலமும் பெற்றுள்ளார். முதல்வர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், இரு வெள்ளி பதக்கங்கள் வென்று, தலா ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.
மாவட்ட அளவிலான போட்டியில், இரு தங்க பதக்கங்கள் வென்று தலா ரூ.6,000 பரிசுத்தொகை பெற்றுள்ளார். சி.பி.எஸ்.இ., தேசிய அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, 200 மீ., பட்டர் பிளை பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். தற்போது, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடக்கும் எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய போட்டிகளுக்கு, இவர் தேர்வாகிஉள்ளார்.