/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய பட்டு புடவைகள் விற்பனை கண்காட்சி
/
தேசிய பட்டு புடவைகள் விற்பனை கண்காட்சி
ADDED : பிப் 03, 2024 01:08 AM

கோவை:கோவையில் தேசிய பட்டு புடவைகள் விற்பனை கண்காட்சி, அவினாசி ரோட்டில் பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த கண்காட்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புடவைகள் மற்றும் ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சணல் பட்டு, பளபளப்பான பச்சை டஸ்ஸார் மற்றும் காந்த வேலை செய்யப்பட்ட புடவைகள், டாக்காய் ஜம்தானி, மாஸ்லின் பட்டு, பலுச்சாரி, தங்கைல், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கைத்தறி புடவைகள், உப்படா புடவைகள் இடம் பெற்றுள்ளன. இரட்டை நெசவு இக்காட்ஸ், கிச்சா பட்டுகள், பருத்தி பட்டுப் புடவைகளும் உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பட்டு நெசவாளர்கள் தங்களின் தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளனர். சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, நாளை நிறைவு பெறுகிறது.

