UPDATED : நவ 25, 2026 05:54 PM
ADDED : நவ 25, 2026 05:54 PM

துடியலூர்:
உலக இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, துடியலூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல், அன்றாட வாழ்வில் யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகளை செய்தல், சத்தான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை பின்பற்றுதல் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் தடுக்கவும், உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தவும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் முறைகள் எவ்வாறு உதவுகின்றன என்று விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி, வரப்பாளையம் பி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் துடியலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக சென்று, மீண்டும் துடியலூர் பஸ் ஸ்டாண்ட் அடைந்தனர்.
பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், டாக்டர்கள் சிவரஞ்சனி, அனில் தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
