/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாடும், வீடும் வளம் பெற உதவுகிறது நவராத்திரி கொலு; சுந்தராபுரம், போத்தனுார் வாசகியர் அருமையான விளக்கம்
/
நாடும், வீடும் வளம் பெற உதவுகிறது நவராத்திரி கொலு; சுந்தராபுரம், போத்தனுார் வாசகியர் அருமையான விளக்கம்
நாடும், வீடும் வளம் பெற உதவுகிறது நவராத்திரி கொலு; சுந்தராபுரம், போத்தனுார் வாசகியர் அருமையான விளக்கம்
நாடும், வீடும் வளம் பெற உதவுகிறது நவராத்திரி கொலு; சுந்தராபுரம், போத்தனுார் வாசகியர் அருமையான விளக்கம்
ADDED : செப் 30, 2025 12:49 AM

போத்தனூர்; நவராத்திரி விழாவையொட்டி, தினமலர் நாளிதழ் சார்பில் கொலு விசிட் சுந்தராபுரம், போத்தனூர் பகுதிகளில் நேற்று நடந்தது.
நவராத்திரி கொலு வைத்துள்ள வாசகர்களின் வீடுகளுக்கு, அவர்களது அழைப்பினையொட்டி, தினமலர் குழுவினர் விசிட் செய்தனர். கொலுவின் சிறப்பு குறித்து நம் வாசகியர் விளக்கினர்.
பிரம்ம வித்யா, மெயின் ரோடு, போத்தனூர்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு முறையே, மூன்று நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
இப்பாரம்பரிய முறையை செய்வதன் மூலம் நாடும், வீடும் வளம் பெறும். அனைவரும் சுபிட்சமாக இருப்பர். தீயவை விலகி, நன்மை நடக்கும்.
ஜெயஸ்ரீ, சத்யநாராயணா நகர், போத்தனூர்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபடுவதால் நம் பிரச்னைகள் தீர்ந்து, வளத்திற்கு வழிவகுக்கும். இம்மூவரும் ஒளி வடிவாக இருப்பதாக ஐதீகம். அதனால்தான் அணையா விளக்கேற்றி வழிபடுகிறோம்.
சுவர்ணலட்சுமி, எம்.ஜி.ஆர்.
நகர், போத்தனூர்
முப்பெரும் தேவியரை, நவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபடுவது வாழ்க்கை வளமாக அமைய வழி பிறக்கும்.
கல்பனா, மகாலிங்கபுரம், வெள்ளலூர்
நவராத்திரி நம் வாழ்க்கையை வளம் பெற செய்யும். ஒவ்வொரு படைப்பிற்கும் இவ்வுலகில் இடமுண்டு என்பதை உணர்த்தும். 40 ஆண்டுகளான மரப்பாச்சி பொம்மை, பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட ராதை, கிருஷ்ணர் ஆகியவை முக்கியமாகும்.
அனந்தலட்சுமி, மகாலிங்க புரம், வெள்ளலூர்
வளம், மன அமைதி கிடைக்க இந்நவராத்திரி கொலு வைக்கிறோம்.
பாரம்பரியம், கலாசாரம் இதனை வளரும் தலைமுறையினர் அறிய ஒரு சந்தர்ப்பமாகும். அனைவரும் சுபிட்சம் பெற வேண்டும்.
சித்ரா, மகாலிங்கபுரம், வெள்ளலூர்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டால், அனைத்தும் நன்மையாக அமையும். பரம்பரை, பரம்பரையாக கொலு வைக்கிறோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே முக்கியம். வாசகியர் அமைத்திருந்த கொலுவில், சோலார் மின் திட்டம், கிராம வாழ்க்கை, ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள், திருமண வைபவம், கிரிக்கெட் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.