/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா
/
ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா
ADDED : அக் 13, 2024 10:05 PM

நெகமம் : நெகமம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி நிகழ்ச்சி கடந்த, 3ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 4ம் தேதி, திருவிளக்கு வழிபாடு நடந்தது. 11ம் தேதி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு நடந்தது. 12ம் தேதி, அலகு சேர்வை செய்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சியில், பக்தர்கள் அம்மனை தரிசித்து கத்தி போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முளைப்பாரி எடுக்கப்பட்டது. மதியம், மாவிளக்கு பூஜை மற்றும் ராகு தீப பூஜைகள், அம்பு சேர்வை, சுவாமி திருவீதி உலா நடந்தது.
இன்று, 14ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மற்றும் அன்னதானம் நடக்கிறது.
உடுமலை
உடுமலை ஜி.டி.வி., லே -அவுட் செல்வ விநாயகர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
நவராத்திரியையொட்டி துர்க்கை அம்மனுக்கு காலை, மாலையில் அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. விஜயதசமி அன்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.