/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
/
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
ADDED : செப் 23, 2025 09:11 PM

பெ.நா.பாளையம், ;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா உற்சாகமாக துவங்கியது.
நாடு முழுவதும் செப்., 22 முதல் அக்., 2 வரை நவராத்திரி விழா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அம்மன் கோவில்களில் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசக நகரில் உள்ள மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளில் கணபதி ஹோமம் மற்றும் துர்க்கைக்கு அபிஷேக ஆராதனைகளும், விடம் தீர்த்த நாயகிக்கு சிறப்பு பூஜைகளும்நடந்தன. பின்னர் கொலு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட தெய்வ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. விழாவையொட்டி காமாட்சி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
விழாவில், பங்கேற்ற பெண்கள் சகஸ்ரநாமம் மற்றும் அம்பிகை பாடல்களை பாடி அம்பாளை வழிபட்டனர். நிறைவு பூஜைக்கு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், காமராஜர் நகர் ராஜராஜேஸ்வரி திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரியையொட்டி கொலு வைக்கப்பட்டு உள்ளன.