/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவராத்திரி விழா இன்று துவக்கம்; முப்பெரும் தேவியருக்கு வழிபாடு
/
நவராத்திரி விழா இன்று துவக்கம்; முப்பெரும் தேவியருக்கு வழிபாடு
நவராத்திரி விழா இன்று துவக்கம்; முப்பெரும் தேவியருக்கு வழிபாடு
நவராத்திரி விழா இன்று துவக்கம்; முப்பெரும் தேவியருக்கு வழிபாடு
ADDED : அக் 03, 2024 12:09 AM

கோவை : முப்பெரும் தேவியரை வழிபடுவதற்குரிய காலம் நவராத்திரி. துர்கா, சரஸ்வதி, லட்சுமி மட்டுமின்றி, துர்க்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி, நவராத்திரி நாளில் சிறப்பாக வழிபடுகின்றனர் பெண்கள்.
நவராத்திரி இன்று துவங்கி, 11ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கொலு பொம்மைகளை, 3, 6, 9, 12, 15, 18 படி வரிசைகளில் வைத்து கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாடுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், நேற்றிரவே தயார் செய்தனர்.
துவக்க நாளான இன்று காலை, அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து வழிபட துவங்குகின்றனர்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், சக்தியின் ஒவ்வொரு வடிவத்தையும், முதன்மைப்படுத்தி வழிபடுவர். ஒன்பது நாட்கள் நவராத்திரி வழிபாடு நிறைவடைந்து, பத்தாவது நாளில் விஜயதசமி விழா, விமரிசையாக கொண்டாடப்படும்.
அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக மகிஷன் என்ற அசுரனை வதம் செய்து, வெற்றி கொண்டதை கொண்டாடும் நாளாகும். தீமை அழிந்து, உலகில் நன்மை காக்கப்பட்டதை நினைவு கூறும் நாளாகும்.
நவராத்திரி காலத்தில் துர்க்கையை வழிபட்டால், மனிதனுக்குள் இருக்கும் அகங்காரம், ஆணவம், எதிர்மறை ஆற்றல்கள், தீய எண்ணங்கள் அழியும் என்பது ஐதீகம்.
இன்று பெரும்பாலான கோவில்களில் கொலு வழிபாடும், அம்மனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், அன்னபூர்ணேஸ்வரி, ராஜவீதி, பூமார்க்கெட், சவுடாம்பிக்கை அம்மன், கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.