/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கோதிபாளையத்தில் அமையும் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
/
சங்கோதிபாளையத்தில் அமையும் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
சங்கோதிபாளையத்தில் அமையும் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
சங்கோதிபாளையத்தில் அமையும் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : நவ 24, 2025 06:12 AM

சூலுார்: சங்கோதிபாளையம் சமத்துவபுரத்தில், நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் விரைவில் துவக்கப்பட உள்ளது.
சூலுார் போலீஸ் எல்லையை இரண்டாக பிரித்து, நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டும் என, போலீஸ் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ரூ. 4.80 கோடி செலவில் நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்படும், என, முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நிரந்தர கட்டடம் கட்ட இடம் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தற்காலிகமாக ஸ்டேஷன் துவக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும், என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். நீவம்பூர் சமுதாய கூடத்தில் திறக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அது கைவிடப்பட்டது. இதையடுத்து, அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கோதிபாளையம் சமத்துவபுரத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடத்தில், தற்காலிகமாக, ஸ்டேஷனை திறக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து முடிந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
ஸ்டேஷன் எல்லை அரசூர், நீலம்பூர், மயிலம்பட்டி, ராசி பாளையம் ஆகிய ஊராட்சிகளும், கோவில் பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இருந்து வெள்ளானைப்பட்டி ஊராட்சியும், அன்னூரில் இருந்து நாராணாபுரம், பச்சாபாளையம் ஊராட்சி பகுதிகளும் புதிதாக துவக்கப்படும் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷனின் கீழ் வரும்,என, தகவல் வெளியாகி உள்ளது.

