/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியை பசுமையாக்க மலைவேம்பு நாற்று நடவு
/
பள்ளியை பசுமையாக்க மலைவேம்பு நாற்று நடவு
ADDED : அக் 08, 2024 12:18 AM

வால்பாறை : வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழா, மரக்கன்று நடும் விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.
ஒரு வாரமாக நடந்த நாட்டு நலப்பணி திட்ட துவக்க நாள் முகாமில், 150 மரக்கன்றுகளை மாணவர்கள் நடவு செய்தனர். முகாமில், இயற்கை பாதுகாப்பு, சுகாதாரம், சட்ட விழிப்புணர்வு, போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாட்டுபோட்டி, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிறைவு நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமில், பள்ளியை பசுமையாக்கும் வகையில், 150 மலைவேம்பு நாற்றுக்களை பள்ளி வளாகத்தை சுற்றிலும் மாணவர்கள் நடவு செய்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவியாளர் ராகவன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.