/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்விக்குழுமம் 'ரித்தி - 2025 பணிநியமன ஆணை வழங்கும் விழா
/
நேரு கல்விக்குழுமம் 'ரித்தி - 2025 பணிநியமன ஆணை வழங்கும் விழா
நேரு கல்விக்குழுமம் 'ரித்தி - 2025 பணிநியமன ஆணை வழங்கும் விழா
நேரு கல்விக்குழுமம் 'ரித்தி - 2025 பணிநியமன ஆணை வழங்கும் விழா
ADDED : மே 15, 2025 11:41 PM

கோவை; நேரு கல்விக்குழுமங்களின் சார்பில், 'ரித்தி-2025'ம் எனும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், 2000 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. கல்விக்குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமைவகித்தார்.
கடந்த, 2024-25ம் கல்வியாண்டில், 2000 மாணவர்கள், 3000 பணிநியமன ஆணைகளை, 200க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களில் பெற்றுள்ளனர்.
ஒரு மாணவர் இரண்டு, மூன்று நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு தகுதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் தொழில்துறைக்கு தேவைப்படும் அடிப்படை திறன்கள், மாற்றத்திற்கு ஏற்ற மாறுபாடுகள், ஆர்வம் மற்றும் தேடலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிகழ்வில், விப்ரோ நிறுவன அதிகாரி ராதிகாரவி, நேரு கல்விக்குழுமங்களின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, நேரு கார்ப்பரேட் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை இணைப்பு மைய இயக்குனர் ரமேஷ் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.