/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நேரு சர்வதேச பள்ளி
/
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நேரு சர்வதேச பள்ளி
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நேரு சர்வதேச பள்ளி
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நேரு சர்வதேச பள்ளி
ADDED : செப் 27, 2025 01:03 AM

'இ யற்கை சூழலில் அமைந்துள்ள எங்கள் நேரு சர்வதேச பள்ளியில், மாணவர்களுக்கு தரமான முறையில் கல்வி பயிலும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது,' என, பள்ளி தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
நாங்கள் மாணவர்களுக்கு இயற்கையோடு தொழில்நுட்ப முறையில் கற்றலை மேம்படுத்துவதால் அனைத்து மாணவர்களுக்கும் சிந்தித்து செயல்படும் திறன், கற்பனைத்திறன் வளர்க்கிறது. பாடத்தின் கற்றலை புதுமைப்படுத்தி பாடம் நடத்துகிறோம்.
மழலையர் பள்ளிக் குழந்தைகள் முதல் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு, கிரீடோ முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. கண்கள் பார்த்து கைகள் சேர்த்து செய்யும் வேலைகளால் கல்வி எளிதாகிறது. இம்முறையில் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பினாக்கிள் பிளஸ் வாயிலாக கல்வி அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்டெக்ரேட்டட் பவுண்டேஷன் புரோகிராம் என்ற கல்வி முறையில் கல்வி உயர்ந்த இடத்தை அடைகிறது.
கற்றலில் சிறிது இடர்பாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்றபடி எளிமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியும், ஒவ்வொரு மாணவர்களின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டும் ஆசிரியர்கள் செயல்படுகின்றனர்.விளையாட்டுத் துறையில் அனைத்து விதமான போட்டிகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.
பிளஸ்1 மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தார்மீக அடிப்படையிலான கற்றல்முறை, மாணவர்களின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் எண்ணங்களையும் வெற்றிப்பாதையாக அமைப்பதே எங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.