/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேந்திரன், கதளி விலை குறைவு; விவசாயிகள் அதிர்ச்சி
/
நேந்திரன், கதளி விலை குறைவு; விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : செப் 08, 2025 10:50 PM
மேட்டுப்பாளையம்; நேந்திரன், கதளி வாழைக்காய் மற்றும் வாழைத்தார்களின் விலை குறைந்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு நடந்த ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 10 ரூபாய்க்கும், அதிகபட்சம், 25 ரூபாய்க்கும், கதளி குறைந்தபட்சம், 20க்கும், அதிகபட்சம், 60 ரூபாய்க்கும் ஏலம் போனது.
பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 100க்கும், அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 750க்கும், தேன் வாழை அதிகபட்சம், 850க்கும், செவ்வாழை, அதிகபட்சம், 850 ரூபாய்க்கும், மொந்தன், அதிகபட்சம், 250க்கும், ரோபஸ்டா, அதிகபட்சம், 250 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், 410 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. நேந்திரன் சிப்ஸ் தேங்காய் எண்ணெயில் போட்டால் தான் விற்பனை செய்ய முடியும்.
ஓணம் நேரத்தில் சிப்ஸின் விலை உயர்த்தினால் மக்கள் வாங்க மாட்டார்கள். அதனால் வாழைக்காயின் விலையை வியாபாரிகள் குறைத்துள்ளனர். மேலும் கேரளாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வாழைப்பழங்களின் தேவையும், மக்களிடையே குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதனால் வாழை காய்களின் விலை குறைந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பொது மக்களிடையே வாழைப்பழம் சாப்பிடுவது குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.