/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடுதிரையுடன் புதிய அங்கன்வாடி மையம்
/
தொடுதிரையுடன் புதிய அங்கன்வாடி மையம்
ADDED : ஜூலை 14, 2025 11:42 PM

கோவை; கோவை, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனியில், புதிய அங்கன்வாடி மையம் நேற்று திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி நிர்வாகம், குழந்தைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேற்கு மண்டலத்தின் வார்டு எண் 45க்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூர், கவுடேகவுடா வீதியில் புதிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பங்களிப்பில், ரூ.16 லட்சம் மற்றும் தனியார் பங்களிப்புடன் இணைந்து, மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தினை, மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.
புதிய மையத்தில் குழந்தைகளின் கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில், பெரிய அளவிலான எல்.இ.டி., தொடுதிரை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.