/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டின் புது வரவு; டைரியில் பவர் பேங்க்... டிஜிட்டல் வாட்டர் பாட்டில்!

ADDED : டிச 18, 2025 05:10 AM

கோவை: புத்தாண்டு நெருங்கினாலே, விதவிதமான டைரிகள், 'ஆர்கனைசர்'களை வாங்கி பயன்படுத்துவோரின் ரசனைக்குத் தீனி போடும் அளவுக்கு, புது வரவுகள் இருக்கும். இந்த ஆண்டும் தேர்ந்தெடுக்க ஸ்டைலிஷான டைரிகள், சந்தைக்கு வந்திருக்கின்றன.
பவர் பேங்க் இணைப்புடன் கூடிய டைரிகள், கார்டு ஹோல்டர், பேனா, கீ செயின் என பரிசாக கொடுப்பதற்கான டைரி செட் என, மக்களை ஈர்க்கும் அம்சங்கள் உள்ளன. அழகான பேக்கிங்கில், டைரியின் அட்டைக்குள் 8,000 மற்றும் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச்., திறன் கொண்ட பவர் பேங்க்குகள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்டைலாக டைரியை பயன்படுத்திக் கொண்டே, மொபைல் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இந்த வசதியுடன், சில டைரிகளில், ரீடிங் லைட்டும் இணைக்கப்பட் டுள்ளது.
பரிசாகக் கொடுப்பதற்கான டைரி செட்களில் ஏராளமான தேர்வுகள் உள்ளன. பேனா, கார்டுஹோல்டர், கீ செயின் ஆகியவற்றை உள்ளடக்கிய டைரி செட்கள் விற்பனைக்கு உள்ளன.
இவற்றுடன், டிஜிட்டல் வாட்டர் பாட்டிலுடன் கூடிய டைரி செட் மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.