/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அசோகபுரம் அரசு மாதிரி பள்ளியில் புதிய வகுப்பறை
/
அசோகபுரம் அரசு மாதிரி பள்ளியில் புதிய வகுப்பறை
ADDED : மார் 18, 2025 04:14 AM
பெ.நா.பாளையம்,: துடியலுார் அருகே உள்ள அசோகபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இப்பள்ளியில் பொதுப்பணி துறை சார்பில், 94.24 லட்சம் ரூபாய் செலவில், புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி தலைமையில், கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், பொதுப்பணித்துறை இன்ஜினியர் திவ்யா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், மாவட்ட பிரதிநிதி செந்தில் ராஜா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.