/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் புதிய கல்வி கொள்கை'
/
'ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் புதிய கல்வி கொள்கை'
ADDED : செப் 22, 2024 05:55 AM

கோவை : கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலையில், 15வது பட்டமளிப்பு விழா, வேந்தர் ராமசாமி தலைமையில் நடந்தது.
தைரோகேர் நிறுவன தலைவர் வேலுமணி பேசுகையில், ''கல்வியே ஒழுக்கமான சமுதாய கட்டமைப்பின் அடிப்படை. மாணவர்கள் நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு, பொது நலனுடன் ஆளுமைகளாக திகழவேண்டும். புதிய கல்விக்கொள்கை போன்றவை ஆளுமை வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் உள்ளது,'' என்றார்.
இந்நிகழ்வில், 2,644 பேர் பட்டங்களை பெற்றனர். 52 பேருக்கு முனைவர் பட்டமும், 51 மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மை செயலர் அலுவலர் முருகையா, துணைவேந்தர் வெங்கடாச்சலபதி, பதிவாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.