/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மின்கம்பங்கள் இருப்பு வைப்பு;: மின்வாரியம் முன்னெச்சரிக்கை
/
புதிய மின்கம்பங்கள் இருப்பு வைப்பு;: மின்வாரியம் முன்னெச்சரிக்கை
புதிய மின்கம்பங்கள் இருப்பு வைப்பு;: மின்வாரியம் முன்னெச்சரிக்கை
புதிய மின்கம்பங்கள் இருப்பு வைப்பு;: மின்வாரியம் முன்னெச்சரிக்கை
ADDED : ஆக 21, 2025 08:25 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மின்வாரிய கோட்டத்தில், முத்துக்கவுண்டனுார், மைவாடி பகுதியில் இருந்து, கான்கிரீட் மின்கம்பங்கள் தருவிக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன.
இதற்காக, 2,759 டிரான்ஸ்பார்மர், மின்கம்பிகள் மற்றும் மின்சாதனங்களை தாங்குவதற்கு ஏதுவாக, தாழ்வழுத்த மின்பாதையில், 79,014 கம்பங்கள், உயரழுத்த மின்பதையில், 23,774 கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை, வெயில், காற்று காரணமாக கான்கிரீட் மின்கம்பங்கள் அதிகளவு சேதமடைகின்றன.
இதுதவிர, மின் கம்பங்களின் மீது பல்வேறு எடை அதிகமான பொருட்களை சாய்த்து வைப்பது, பந்தல் போட பயன்படுத்துவது, கம்பங்களின் கீழ் குப்பைகளை கொட்டுவது, வாகனங்கள் மோதுவது போன்ற காரணங்களாலும் மின்கம்பங்கள் சேதமாகி வருகின்றன. பழுதான மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தை பொறுத்தமட்டில் உடுமலை அருகே உள்ள முத்துக்கவுண்டனுார், மைவாடி பகுதியில் இருந்து, கான்கிரீட் மின்கம்பங்கள் பெறப்படுகின்றன. அவை போதுமான அளவு, இருப்பும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த காலங்களில், மண்டல அளவில் மின்வாரியத்தின் பணிமனை வாயிலாக மின் கம்பங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான பணிமனைகள் மூடப்பட்டதால், வெளி மாநிலங்களில் இருந்து, மின் கம்பங்கள் தருவிக்கப்படுகின்றன.
கோவை மண்டலத்தில், சேதமடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் மின்கம்பங்கள், 9 மீட்டர் உயரத்தில் 300 கிலோ எடையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆனால், பொள்ளாச்சி கோட்டத்தில், போதுமான அளவில் மின்கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சேதமடையும் மின்கம்பங்கள் கண்டறியப்பட்டால், அவை உடனுக்குடன் அகற்றி மாற்றியமைக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.