/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமத்தம்பட்டியில் புதிதாக தீயணைப்பு நிலையம் திறப்பு
/
கருமத்தம்பட்டியில் புதிதாக தீயணைப்பு நிலையம் திறப்பு
கருமத்தம்பட்டியில் புதிதாக தீயணைப்பு நிலையம் திறப்பு
கருமத்தம்பட்டியில் புதிதாக தீயணைப்பு நிலையம் திறப்பு
ADDED : பிப் 02, 2025 01:18 AM
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் மற்றும் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக தொழில்துறையினர் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் துவக்க அரசு உத்தரவிட்டது.
கருமத்தம்பட்டி --- சோமனூர் ரோட்டில் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று நிலையத்தை திறந்து வைத்தார். கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, நகராட்சி தலைவர் மனோகரன், முருகேசன், தீயணைப்பு அலுவலர்கள் சுரேஷ்குமார், ராமசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுற்றுவட்டாரத்தில், மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்கு 0421 -2220101 என்ற எண்ணில் மக்கள் அழைக்கலாம்.