/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூ., கட்சி தீர்மானம்
/
கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூ., கட்சி தீர்மானம்
கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூ., கட்சி தீர்மானம்
கோவையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூ., கட்சி தீர்மானம்
ADDED : ஜூலை 23, 2025 09:19 PM
பெ.நா.பாளையம்; கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என, இந்திய கம்யூ., கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவில் இந்திய கம்யூ., கட்சியின் கோவை மாவட்ட, 25வது மாநாடு நடந்தது.
இதில், ஜாப் ஆர்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி சார்ந்த சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பயன்படாமல் உள்ள தரிசு நிலங்களை, தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி, புதிய தொழில் பேட்டைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு தொழில் ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோவை மாநகராட்சி வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என, அனைத்து வரிகளையும் மிக அதிக அளவில் உயர்த்தி உள்ளது. அதை குறைக்க வேண்டும்.
மதுக்கரை நீலாம்பூர் புறவழிச்சாலையை, 6 வழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு பாசன திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்பு வீடுகள் கட்டி தர வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க வேண்டும். சிறு தொழில், குறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டையொட்டி கட்சியின், 45 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவும், மாவட்ட செயலாளராக சிவசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் பெரியசாமி, மாநில பொருளாளர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்தானம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.