/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா
/
மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா
மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா
மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா
ADDED : நவ 17, 2025 01:06 AM

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய நுாலகம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் நடந்தது.
புதிய நுாலகத்தை எஸ்டேட் பொதுமேலாளர் திம்மையா திறந்து வைத்து பேசும் போது, ''மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், பள்ளியில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் மத்தியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளியில் புதியதாக நுாலகம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக தனி வகுப்பறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றாடம் செய்தித்தாள்களை தவறாமல் படித்து, நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், நுாலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்''என்றார்.
விழாவில் பள்ளிக்குழு செயலாளர் ஜான்சன், தொழிற்சாலை அதிகாரி நடராஜ், பி.பி.டி.சி., கணக்காளர் ராஜன், ஆர்.சி., சர்ச் ஆலய பங்கு தந்தை மரியபெணிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.

