/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
/
புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
ADDED : டிச 25, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
: பொங்கலுாரில், பழைய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தின் ஒரு பகுதியில், புதிதாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பொங்கலுாரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட கள்ளிப்பாளையம், வடமலை பாளையம், காட்டூர்; அவிநாசி பாளையத்திற்குட்பட்ட பொங்கலுார், உகாயனுார்; பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட மாதப்பூர் என ஆறு ஊராட்சிகள் பொங்கலுார் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் -

