தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு நிர்வாக செயல்பாடுகள் இளைஞர்கள் கற்க புது திட்டம்

அரசு நிர்வாக செயல்பாடுகள் இளைஞர்கள் கற்க புது திட்டம்

அரசு நிர்வாக செயல்பாடுகள் இளைஞர்கள் கற்க புது திட்டம்


UPDATED : அக் 15, 2026 07:09 PM

ADDED : அக் 15, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:09 PM ADDED : அக் 15, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: இளைஞர்கள், மக்கள் பிரதிநிதியுடன் பயணித்து, அரசு நிர்வாகத்தை கற்றுக் கொள்ளும் ஆறு மாத கால பயிற்சி திட்டத்தை, கவுண்டம்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., கனிமொழி துவக்கினார்.

கே.ஜி.எப்., என்ற இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், ஆறு மாதம் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., கனிமொழியுடன் பயணித்து மக்கள் பிரதிநிதியின் அன்றாடப்பணிகள், தொகுதி மக்களின் கோரிக்கைகள், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பயிற்சிக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏ., கனிமொழி கூறுகையில், ‘‘பயிற்சியின் போது அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, பொதுமக்களின் பிரச்னைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதில், மக்கள் பிரதிநிதியின் பங்கு என்ன என்பது குறித்து, இளைஞர்கள், நடைமுறை அனுபவத்தின் வாயிலாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us