/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
/
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
ADDED : நவ 05, 2025 11:11 PM
கோவை: கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மகளிர் உரிமைத்தொகை திட்ட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தாட்கோ பொது மேலாளர் நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான 26 அதிகாரிகள், வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பொது மேலாளராக பணிபுரிந்த நாராயணன், கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை டி.ஆர்.ஓ., ஆக பணியாற்றிய ஷர்மிளா, வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கவனிக்க துணை கமிஷனராகவும், சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்துக்கு தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வேலுார் மாவட்ட டி.ஆர்.ஓ., மாலதி, கோவை மாவட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் லதா, கோயமுத்துார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்திருக்கிறார்.

