sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புது வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை உள்ளாட்சி தேர்தலுக்கு

/

 புது வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை உள்ளாட்சி தேர்தலுக்கு

 புது வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை உள்ளாட்சி தேர்தலுக்கு

 புது வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை உள்ளாட்சி தேர்தலுக்கு


ADDED : மார் 14, 2026 06:50 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த, புதிதாக தயாரித்துள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெங்களூருவில் இருந்து நேற்று தருவிக்கப்பட்டன.

தேர்தல் செலவினத்தை குறைக்கும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

லோக்சபா, சட்டசபை தேர்தலை ஒரே சமயத்தில் நடத்தும் பட்சத்தில், ஒரே நேரத்தில் இரு தேர்தலுக்கும் ஓட்டளிக்கும் வகையில், பெங்களூர் பெல் நிறுவனம் புதிதாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாரித்துள்ளன. பரீட்சார்த்த முறையில், உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாவட்டத்துக்கு 4,270 பேலட் யூனிட், 3,850 கன்ட்ரோல் யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டன. பெங்களூரு சென்ற மாநகராட்சி குழுவினர், அவ்வியந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவை எடுத்து வந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, இருப்பு வைத்து சீலிடப்பட்டது.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'தற்போது தருவித்திருப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பதவி இடங்களுக்கு ஓட்டளிப்பதற்கான புது வகை இயந்திரங்கள். தற்போது பயன்படுத்தும் இயந்திரத்தில் 16 பட்டன் இருக்கிறது; புது இயந்திரத்தில் 15 பட்டன்களே உள்ளன. இவற்றை பயன்படுத்த பெல் இன்ஜினியர்கள் பயிற்சி அளிப்பர்' என்றனர்.






      Dinamalar
      Follow us