/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கால்நடை உதவி மருத்துவர் பொறுப்பேற்பு
/
புதிய கால்நடை உதவி மருத்துவர் பொறுப்பேற்பு
ADDED : மார் 30, 2025 10:48 PM
வால்பாறை; கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய கால்நடை உதவி மருத்துவராக நந்தினிதேவி பொறுப்பேற்றார்.
வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகரில், கால்நடை பராமரிப்புதுறை அலுவலகம் உள்ளது. இந்த துறையின் கால்நடை உதவி மருத்துவராக பணிபுரிந்து வந்த செந்தில்நாதன், கோவைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, திருச்செந்துார் சாத்தான்குளம் கால்நடை பராமரிப்புத்துறையில் பணிபுரிந்து வந்த நந்தினிதேவி, வால்பாறை கால்நடை துறை உதவி மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார். வால்பாறைக்கு முதன் முறையாக பெண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.