/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு
ADDED : டிச 31, 2025 07:47 AM
பொள்ளாச்சி: புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட, ஆனைமலை புலிகள் காப்பகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, இன்று வால்பாறை, ஆழியாறு, டாப்ஸ்லிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் சுற்றுலா பயணியர் பாதுகாப்பாகவும், வனவிலங்குகள் மற்றும் வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய ஏற்பாடுகளை ஆனைமலை புலிகள் காப்பகம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனைச் சாவடி வழியாக செல்ல வேண்டும்.
இதில், ஆழியாறு சோதனை சாவடியில், காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரையும், சேத்துமடை சோதனை சாவடியில், காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனப்பகுதியில் உள்ள ரோட்டில் இரவு நேர பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணியர் வேக வரம்பை கடைபிடிக்கவும், தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இத்துடன் வனத்துறை பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.
புலிகள் காப்பகப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பது, மது அருந்துவது, அதிக சத்தத்துடன் இசை, ஹாரன் அடிப்பது, குப்பை கழிவு வீசுவது மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவது, தொந்தரவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடக்கும் சுற்றுச்சூழல் சுற்றுலா செயல்பாடுகளில், அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு வாயிலாக மட்டுமே, வனத்துறை பணியாளர்கள் மேற்பார்வையுடன் அனுமதிக்கப்படும்.
மேலும், விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பாதிப்புக்குரிய இடங்களில் சோதனைச் சாவடிகளும் போதிய அளவு வனத்துறை பணியாளர்கள் உள்ளார்கள்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாட ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

