ADDED : அக் 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்,:கோவை, வாழும் கலை அமைப்பின் சார்பில் கடந்த, 20 ஆண்டுகளாக தீபாவளி முன்னிட்டு, அரசு பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு, புத்தாடை வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இவ்வாண்டு, கோவைபுதூர் அடுத்த அறிவொளி நகரிலுள்ள, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும், 38 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.