சிரசாசனம் என்றால் தலையை ஆசனமாக கொள்வது என்று பொருள்.
பொதுவாக எல்லா வகையான ஆசனங்ளையும், தகுந்த யோகா ஆசிரியர்களின் துணையோடுதான் செய்ய வேண்டும். இருந்தாலும், ஆசனங்களின் அரசன் சிரசாசனம் என்பதாலும், அபாயகரமானது என்பதாலும், இதை தகுந்த யோகா ஆசிரியரின் துணையோடுதான் செய்ய வேண்டும். அதனால்தான் இந்த ஆசனத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறையை, இங்கு குறிப்பிடவில்லை.பலன்ஞாபக சக்தியை அதிகரிக்கும். தலைப்பகுதியை நன்கு பலப்படுத்தும். குறிப்பாக, தலையில் உள்ள காது, கண், மூக்கு, பற்கள், ஈறுகள் உள்ளிட்டவற்றை பலப்படுத்தும். மூளைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் வலுவடையும். குறிப்பாக வலிப்பு நோய் வராமல் பாதுகாக்கும். மன ஒருமைப்பாட்டுக்கு மிகவும் நல்லது.குறிப்புஆசனங்களை வெறும் வயிற்றுடன் செய்ய வேண்டும்.காற்றோட்டம் மிக்க பகுதியில், தளர்வான ஆடைகள் அணிந்துசெய்வது நல்லது. தினமும், 15 முதல் 45 நிமிடங்கள் வரை யோகாசனம் செய்யலாம். யோகா ஆசிரியர் துணையுடன் செய்வது நல்லது.