/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை போட்டி என்.ஜி.எம். கல்லுாரி வெற்றி
/
முதல்வர் கோப்பை போட்டி என்.ஜி.எம். கல்லுாரி வெற்றி
முதல்வர் கோப்பை போட்டி என்.ஜி.எம். கல்லுாரி வெற்றி
முதல்வர் கோப்பை போட்டி என்.ஜி.எம். கல்லுாரி வெற்றி
ADDED : நவ 22, 2025 05:23 AM

பொள்ளாச்சி: மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகளில் என்.ஜி.எம். கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு கோவை மாவட்டத்துக்காக விளையாடிய என்.ஜி.எம். கல்லுாரி மாணவியர் புளோரா ஜென்சி, முத்துலட்சுமி, ராகமிதா, கயல்விழி ஆகியோர் தேர்வாகினர்.
சென்னையில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு பரிசு தொகையாக தலா, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் கல்லுாரி மாணவர் பிரபின் நீளம் தாண்டுதலில், 7.53 மீட்டர் நீளம் தாண்டி மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.இவருக்கு பரிசு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதுபோன்று கல்லுாரி மாணவர் அரவிந்த், 110 மீ., தடை தாண்டும் ஓட்டப்போட்டியில், 14.5 வினாடியில் ஓடி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

