/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கணம்-25' என்.ஜி.பி., வாலிபால் டிராபி: முதல் பரிசை தட்டியது பி.கே.ஆர்., அணி

ADDED : பிப் 10, 2025 10:54 PM

கோவை; மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பி.கே.ஆர்., கல்லுாரி 'ஏ' அணி முதல் பரிசை தட்டியது.
டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் 'கணம்-25' எனும் இரண்டாவது மாநில அளவிலான வாலிபால் போட்டி இரு நாட்கள் நடந்தது. மாணவியருக்கான இப்போட்டியில் கலை அறிவியல், இன்ஜி., என, 22 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. 'நாக்-அவுட்' சுற்றுகளை அடுத்து 'லீக்' முறையில் போட்டிகள் நடந்தன.
இதில், பி.கே.ஆர்., கல்லுாரி 'ஏ' அணி, 3-0 என்ற செட் கணக்கில் யாதவா கல்லுாரி அணியையும், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 3-1 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர்., கல்லுாரி அணியையும், பி.கே.ஆர்., கல்லுாரி 'ஏ' அணி, 3-0 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர்., கல்லுாரி 'பி' அணியை வென்றது.
நிர்மலா கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் யாதவா கல்லுாரி அணியையும், பி.கே.ஆர்., கல்லுாரி 'ஏ' அணி, 3-1 என்ற செட் கணக்கில் நிர்மலா மகளிர் கல்லுாரி அணியையும் வென்றது. முடிவில், பி.கே.ஆர்., கல்லுாரி 'ஏ' அணி முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடத்தை நிர்மலா மகளிர் கல்லுாரியும், மூன்றாம் இடத்தை பி.கே.ஆர்., கல்லுாரி 'பி' அணியும், யாதவா கல்லுாரி அணி நான்காம் இடத்தையும் வென்றன. முதல் நான்கு பரிசுகளாக ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7,500 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.