/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் பரவுகிறது 'நிபா'; கோவை எல்லையில் சோதனை
/
கேரளாவில் பரவுகிறது 'நிபா'; கோவை எல்லையில் சோதனை
ADDED : ஜூலை 16, 2025 10:57 PM
போத்தனூர்; கேரள மாநிலத்தில் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இரு நாட்களுக்கு முன் பாலக்காட்டை சேர்ந்த ஒருவர் இப்பாதிப்பால் பலியானார். 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவி ஒருவரும் பலியானார்.
இந்நிலையில் கோழிக்கோட்டிலும் பலர் இப்பாதிப்பிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணூர், பாலக்காடு மாவட்டங்களில் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தில், கேரள எல்லைகளில் ஒன்றான வாளையாரில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா, தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் கார்த்திகேயன், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோருடன், மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய ஏழு பேர் குழு, இப்பணியில் ஈடுபட்டுள்ளது. இக்குழுவினர் வாகனங்களில் வருவோருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என கண்டறிந்து, மருத்துவ உதவி செய்கின்றனர்.