/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை'
/
'பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை'
ADDED : அக் 26, 2025 11:25 PM

மேட்டுப்பாளையம்: பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை அருகே திருமா நகர் பகுதியில் பஞ்சமி நிலத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
இதனால் இவைகள் அனைத்தையும், இங்குள்ள மக்கள் தாங்களாகவே ஏற்படுத்தி கொண்டு தற்சார்பு வழியினை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், அங்குள்ள பெண்கள் ஒருங்கிணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக விலையில்லா சுயசார்பு காய்கறி தோட்டம் உருவாக்கி உள்ளனர். இதில் கத்திரி, வெண்டை, முருங்கை, பப்பாளி, மாதுளை உள்ளிட்டவைகளை நடவு செய்து, அதனை பராமரித்து வருகின்றனர்.
இதனை நேற்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி மற்றும் எழுத்தாளர் பாரதி சின்னசாமி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதனை உருவாக்கிய பெண்களை பாராட்டினார். பின் செய்தியாளர்களிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ் அதிகாரி சிவகாமி பேசுகையில், பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் பல லட்சம் பஞ்சமி நிலங்கள் மீட்கப்படாமல் உள்ளது, என்றார்.----

