/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனசாட்சியே இல்லையா? மாநகராட்சி நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி; மீண்டும் வெடிக்குது 'வெள்ளலுார் குப்பை குண்டு'

ADDED : நவ 22, 2024 04:14 AM

வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது; தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் பாதித்து மஞ்சள் நிறமாக மாறியிருக்கிறது. மக்களின் அவஸ்தை புரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
வெள்ளலுார் குப்பை கிடங்கில் தினந்தோறும் டன் கணக்கில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. கோணவாய்க்கால்பாளையம், கல்லறை சேரி, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், அருள் முருகன் நகர், மகாலிங்கபுரம், கஞ்சிகோனாம்பாளையம், கம்பர் வீதி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகள் வாழத்தகுதியற்ற இடங்களாக மாறியுள்ளன.
கடந்த சில நாட்களாக, குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடிவதில்லை; இரண்டு கி.மீ., துாரம் கடந்து சுந்தராபுரம், ஈச்சனாரி வரை வீசுகிறது; மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
வாழ வகை செய்யுங்க!
இப்பிரச்னை தொடர்பாக, குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால், செட்டிபாளையம் ரோடு, வெள்ளலுார், போத்தனுார், சுந்தராபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் வசிப்போரை சுகாதாரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.
'நேரில் செல்கிறேன்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து இத்தனை நாட்களாக துர்நாற்றம் வரவில்லை; தற்போது வருவதாக தெரியவந்தது. எதனால் துர்நாற்றம் வருகிறதென ஆய்வு செய்ய வேண்டும். கிடங்கிற்கு நான் நேரில் சென்று பார்வையிட்டு, தீர்வு காண்பேன்,'' என்றார்.