/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மனமில்லை
/
சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மனமில்லை
ADDED : டிச 03, 2024 06:22 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு லட்சுமி நகரில் ரோடு சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இங்கு ஒரு சில பகுதிகளில் முறையான தார் சாலை வசதியும், சில பகுதிகளில் ரோடு உருக்குலைந்தும் காணப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். கிணத்துக்கடவு வட்டாரத்தில் நடந்த முகாம்களிலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து சென்று வர சிரமப்படுகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
இப்பகுதி லே - அவுட்டில், ஆரம்பத்தில் குறைந்தளவு வீடுகளே இருந்தது. தற்போது, குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்குள்ள தார் ரோடு, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த ரோடும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் ஆய்வு மட்டுமே செய்தனர். இரவு நேரத்தில் ரோட்டில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி ரோட்டை விரைவாக சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.