/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகிர்மான குழாய் உடைப்பால் இரு நாட்களுக்கு குடிநீர் வராது
/
பகிர்மான குழாய் உடைப்பால் இரு நாட்களுக்கு குடிநீர் வராது
பகிர்மான குழாய் உடைப்பால் இரு நாட்களுக்கு குடிநீர் வராது
பகிர்மான குழாய் உடைப்பால் இரு நாட்களுக்கு குடிநீர் வராது
ADDED : ஆக 06, 2025 10:16 PM
கோவை; கோவை - சிறுவாணி ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. பேரூர் அருகே காளம்பாளையத்தில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரங்கள் பெயர்த்தெடுக்கப்படுகின்றன.
கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகே, 800 மீட்டர் இடைவெளியில் மரங்களை பெயர்த்தெடுத்தபோது, இரு இடங்களில், 500 எம்.எம்., விட்டமுள்ள குழாய் உடைந்தது. அதனால், குடிநீர் ரோட்டில் வீணானது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 'பம்ப்' செய்வது நிறுத்தப்பட்டது. குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்துார் பகுதிகள், ஆலாந்துறை, பூலுவபட்டி, தென்கரை பேரூராட்சி, பேரூர் செட்டிபாளையம், மத்வராயபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு இரு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.