sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எதிர்பார்ப்புமில்லை; ஏமாற்றமுமில்லை! தொழில் துறையினரின்  கருத்து

/

எதிர்பார்ப்புமில்லை; ஏமாற்றமுமில்லை! தொழில் துறையினரின்  கருத்து

எதிர்பார்ப்புமில்லை; ஏமாற்றமுமில்லை! தொழில் துறையினரின்  கருத்து

எதிர்பார்ப்புமில்லை; ஏமாற்றமுமில்லை! தொழில் துறையினரின்  கருத்து


ADDED : பிப் 02, 2024 01:03 AM

Google News

ADDED : பிப் 02, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் எப்போதும் இப்படித்தான் இருக்கும் அதனால் எவ்வித எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லை என்றுஒட்டுமொத்த தொழில்துறையினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின்இடைக்கால பட்ஜெட் குறித்து கோவை தொழில் துறையினர்தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

சி.டி.ஆர்.ஐ. (அகில இந்தியஜவுளி கூட்டமைப்புபருத்தி அபிவிருத்திக்கழக)தலைவர் ராஜ்குமார் : பருத்திக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரி விதிப்பில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். கடந்த ஆண்டு பின்பற்றிய நடைமுறையையே தற்போதும் பின்பற்றியுள்ளனர். அகில இந்திய பருத்தி கழகத்திற்கு, 600 கோடி ரூபாய் பருத்தி கொள்முதலுக்கென்றுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் துவங்கப்படும் மித்ரா பார்க்கிற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.

சிஸ்பா (தென்னிந்திய நுாற்பாலைகள்சங்கம்)செயலாளர் ஜெகதீஷ் சந்திரன்:

கொரோனா கால கட்டத்தில் பெற்ற அவசரகால கடன் உதவி(இ.சி.ஜி.எல்.எஸ்.) மூன்று ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

தற்போது வர்த்தகம்எதிர்பார்த்த அளவு இல்லாததால் 3ஆண்டு காலமாக இருப்பதைஆறு ஆண்டுகளாக நீட்டிப்பு செய்ய வலியுறுத்தினோம். அதையும் செய்யவில்லை. வங்கதேசத்திலிருந்து, இறக்குமதியாகும் பேப்ரிக் மற்றும் கார்மென்ட் துணிரகங்களுக்கு வரிவிதிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

கொடிசியா (கோவை மாவட்டசிறு தொழில்கள் சங்கம்) தலைவர் திருஞானம்: சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களின் முன்னேற்றத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.மற்ற படி தொழில்துறைக்கு பெரிய அளவில்அறிவிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ இல்லாத பட்ஜெட்.

ஐ. டி.எப். (இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு) கன்வீனர் பிரபு தாமோதரன் : நடப்பு நிதி ஆண்டுக்கான மூலதன செலவுக்கான ஒதுக்கீட்டை 11.1 சதவீதம் அதிகரித்து 11.11 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பது , பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் . அடிப்படை கட்டமைப்பு சார்ந்த பொருட்களின் தேவை அதிகரிப்பதுடன், போட்டித்திறனும் அதிகரிக்கும். முழுமையான பட்ஜெட்டை போல ஒரு எதிர்பார்ப்பு இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லாமல் இருப்பது இயல்பு .

சேம்பர் (இந்திய தொழில் வர்த்தக சபை) கோவைதலைவர் ஸ்ரீராமுலு:நேர்முக மற்றும் மறைமுக வரிவிதிப்பு மற்றும் இறக்குமதி வரியில் எந்த மாற்றமும்இல்லை. மக்களுக்கு சொந்தவீடு வசதி ஏற்படுத்துதல், ஸ்டார்ட்அப் மற்றும் பென்சன் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை ஆகியவை வரவேற்புக்குறியது.

டான்ஸ்டியா (தமிழ்நாடு சிறுகுறு தொழிற்சங்கம்)துணை தலைவர் சுருளிவேல்:கடந்த ஆண்டு என்ன செய்தனர் என்பதை மட்டுமே ஒவ்வொரு துறைவாரியாக குறிப்பிட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் என்ன செய்யப்போகிறோம் என்பதை குறிப்பிடவில்லை. 78 லட்சம்பேருக்கு கடந்த ஆண்டு முத்ரா கடன் கொடுத்ததாக சொல்கின்றனர். நடப்பாண்டு எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை என்பதை சொல்லவில்லை. அதே சமயம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.

கோப்மா (கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம்)தலைவர் மணிராஜ்: மூலப்பொருள் விலை ஏற்றத்தை குறைப்பது தொடர்பான எந்த அறிவிப்புகளும் இல்லை.சிறு,குறு தொழில்துறை மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரியால் கடந்த ஏழு ஆண்டுகளாக வேலை வாய்ப்பு முன்னேற்றம்குறைந்து விட்டது.

காட்மா (கோயமுத்துார் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்) தலைவர் சிவக்குமார்: தொழில்துவங்க வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைப்பது, தொழில்நுட்ப புத்தாக்க திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு, ஒட்டுமொத்த நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குதல் புதிய வரிவிதிப்பு இல்லாதது வரவேற்புக்குரியது.

இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஓரிரு மாதங்களில் தேர்தலை எதிர்க்கொள்ளப்போகும் சூழலில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது. கடந்த கால சாதனைகளை மட்டுமே குறிப்பிடுவர் புதிய திட்டங்கள் ஏதும் இருக்காது. அதனால் எவ்வித எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ இல்லைஎன்று ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us