/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவன மையம் அமைக்கவில்லை கால்நடை துறையினர் தகவல்
/
தீவன மையம் அமைக்கவில்லை கால்நடை துறையினர் தகவல்
ADDED : டிச 17, 2025 06:17 AM
பொள்ளாச்சி: பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் மிகவும் அவசியமாகும். வறட்சி காலத்தில், பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும்போது, கால்நடை வளர்ப்போர், உலர் தீவனத்தையே நம்புகின்றனர்.
விவசாயிகளுக்கு உலர் தீவனம் வெளிச்சந்தையில் கிடைக்காதபோது, அதனை ஈடுகட்டும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, உலர்தீவன விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், உலர் தீவன மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் வழக்கம்போல கிடைப்பதாலும், விவசாயிகளே போதுமான அளவு உலர்தீவனம் இருப்பு வைப்பதால், அரசால் தீவன மையங்கள் அமைக்கப்பட மாட்டாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறையினர் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தீவன மையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும், ஒரு கால்நடைக்கு அதிகபட்சமாக, மூன்று கிலோ உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
ஆனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், மழை காரணமாக பசுந்தீவனம் அதிகளவில் கிடைக்கிறது. உலர் தீவனம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, தீவன மையம் அமைக்கவில்லை,' என்றனர்.

