sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அபராதம் இல்லை... கேள்வி கிடையாது! 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு

/

அபராதம் இல்லை... கேள்வி கிடையாது! 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு

அபராதம் இல்லை... கேள்வி கிடையாது! 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு

அபராதம் இல்லை... கேள்வி கிடையாது! 'ஸ்ப்ரீ-2025' திட்டம் பயன்படுத்த அழைப்பு


ADDED : ஜூலை 31, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

'இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்ய தவறிய நிறுவனங்கள், 'ஸ்ப்ரீ - 2025' திட்டத்தில், முந்தைய பங்களிப்பு தொகை மற்றும் அபராதமின்றி பதிவு செய்து கொள்ளவேண்டும்' என, இ.எஸ்.ஐ., துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசினார்.

இ.எஸ்.ஐ., சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்ப்ரீ - 2025' திட்டம் குறித்த விளக்க கூட்டம், திருப்பூரில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. 'சைமா' தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

கோவை மண்டல இ.எஸ்.ஐ., துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது:

பத்துக்கு மேல் தொழிலாளரை கொண்ட நிறுவனங்கள், 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் பெறும் தொழிலாளரை கட்டாயம் இ.எஸ்.ஐ.,ல் இணைக்கவேண்டும். ஒரு தொழிலாளி பணியில் சேர்ந்த நாள் முதலே, அவர் இ.எஸ்.ஐ., பயன்களை பெற தகுதியானவராகி விடுகிறார்.

ஒருவேளை, பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே, பணி நேரத்தில் தொழிலாளி உயிரிழக்கிறார் என்றாலும், இ.எஸ்.ஐ., சார்பில், அந்த தொழிலாளியின் சம்பளத்தில், 90 சதவீத தொகை, அந்த குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பத்து நாட்களில் பதிவு அவசியம் இ.எஸ்.ஐ., பதிவு இல்லையெனில், குறிப்பிட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் பெருந்தொகையை தொழிலாளியின் குடும்பத்துக்கு வழங்க நேரிடும்.

இது, புதிய தொழில் முனைவோருக்கு மேலும் நெருக்கடியைதான் ஏற்படுத்தும். அந்தவகையில், இ.எஸ்.ஐ., என்பது, தொழிலாளருக்கு மட்டுமல்ல, தொழில்முனைவோருக்கும் உதவிகரமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு தொழிலாளி பணியில் சேர்ந்த பத்து நாட்களுக்குள், இ.எஸ்.ஐ., பதிவு செய்துவிடவேண்டும்.

புதிய நிறுவனங்கள் இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்வதில் கால அவகாசம் வழங்கவேண்டும் என தொழில்முனைவோர் பலர் எதிர்பார்க்கின்றனர். டில்லியில், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் 20 பேரை அங்கத்தினராக கொண்ட இ.எஸ்.ஐ., நிலைக்குழு செயல்படுகிறது. அந்த குழுதான், எத்தகைய முடிவுகளையும் எடுக்க முடியும்.

டிச., 31 வரை திட்டம் அமல் இ.எஸ்.ஐ.,ல் தற்போது 'ஸ்ப்ரீ - 2025' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் துவங்கி பல ஆண்டுகளாகியும், இதுவரை இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்யாத நிறுவனங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சுயமாக தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று முதல் வரும் டிச. 31ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.

பதிவு செய்யாத நிறுவனங்கள், இந்த அவகாசத்துக்குள், பதிவு செய்து கொள்ளவேண்டும். 'ஸ்ப்ரீ' திட்டத்தில் பதிவு செய்யும் நிறுவனங்கள், கடந்த கால பங்களிப்பு தொகை, அபராதம் ஏதும் செலுத்த தேவையில்லை.

மேலும், நிறுவனம் துவங்கிய காலம் முதல் இதுவரை ஏன் இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்யவில்லை என்பன போன்ற கேள்விகளோ, சட்ட நடவடிக்கைகளோ எடுக்கப்படாது; எவ்வித ஆவண தணிக்கையும் மேற்கொள்ளப்படாது.

எனவே, தொழில்முனைவோர் எவ்வித தயக்கமுமின்றி, உரிய கால அவகாசத்தை பயன்படுத்தி, தங்களிடம் பணிபுரியும் தகுதியான தொழிலாளர்களை இ.எஸ்.இ.,ல் பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us