/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லடம் ரோட்டில் ஒளிராத சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்
/
பல்லடம் ரோட்டில் ஒளிராத சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்
பல்லடம் ரோட்டில் ஒளிராத சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்
பல்லடம் ரோட்டில் ஒளிராத சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மார் 04, 2024 11:51 PM

நடைபாதையில் குப்பை
வால்பாறை, கோனார் மருந்து கடை அருகே, மார்க்கெட் செல்லும் வழியில், குப்பையை மூட்டைகளாக கட்டி படிக்கட்டில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியில் செல்ல பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மக்கள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ரப்பேல், காமராஜ் நகர்.
பள்ளி அருகே குப்பை
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டோரத்தில் அதிக அளவு செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் இந்த வழியை தவிர்த்து, ரோட்டில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம், நடைபாதையில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -சந்தோஷ், கிணத்துக்கடவு.
ஒளிராத சிக்னல்
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் உள்ள சிக்னல் ஒளிராமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்ய வேண்டும்.
- -ரஞ்சித், பொள்ளாச்சி.
ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சேரன் நகர் அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பை ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது காற்றில் பறந்து வந்து விழுவதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே, துாய்மை பணியாளர்கள் இதை கவனித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.
-- -வாசு, பொள்ளாச்சி.
மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு, பெரியார் நகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பத்தின் கீழ் பகுதி விரிசல் விட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தின் அருகாமையில் குடியிருப்புகள் இருப்பதால், அப்பகுதி மக்கள் நலன் கருதி மின்கம்பதை உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- -சத்தியசீலன், கிணத்துக்கடவு.
கழிவு குவிப்பால் பாதிப்பு
பொள்ளாச்சி, சேரன் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தின் உணவு கழிவுகளை அகற்றாமல், மூட்டையாக கட்டி வைக்கின்றனர். இதனால், குடியிருப்பு பகுதியில் துார்நாற்றம் ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, வடக்கிபாளையம்.
விபத்து அபாயம்
உடுமலை தாராபுரம் ரோட்டில், பாதாள சாக்கடை மூடியை சுற்றி பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் வாகன ஓட்டுநர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.
- முருகன், உடுமலை.
விரைந்து முடிக்கணும்!
உடுமலை பைபாஸ் ரோட்டில், மழைநீர் வடிகால் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. அதில், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில் குப்பைக்கழிவுகளை சாக்கடை கால்வாயில் போட்டு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குடியிருப்புகளில் புகைமண்டலமாக மாறுகிறது. குப்பைக்கு தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வனிதா, உடுமலை.
சுகாதாரம் இல்லை
உடுமலை, ஜக்கம்பாளையம் கிராம ரோட்டோரம் திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறி வருகிறது. அப்பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டினால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் கழிப்பிடம் கட்டவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.
பயணியர் அவதி
உடுமலை, போடிபட்டி பஸ் ஸ்டாப் நிழற்கூரை வசதி இல்லாததால், பயணியர் காத்திருப்பதற்கு வழியில்லாமல் உள்ளனர். பஸ் ஸ்டாப் ஒரு புறமும் பயன்படுத்த முடியாத நிலையில் நிழற்கூரை வேறுபக்கமும் இருப்பதால் பயணியர் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது.
- பிரகாஷ், உடுமலை.
டி வைடர் வேண்டும்
உடுமலை, தளி ரோடு மேம்பாலம் அருகே டிவைடர் இல்லாததால், எதிரெதிரில் ரோட்டிலிருந்து வாகனங்கள் வந்து விபத்துக்குள்ளாகிறது. வாகன ஓட்டுநர்களும் விதிமுறை மீறி ரோட்டை கடப்பதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. எனவே, அப்பகுதியில் டிவைடர் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளீஸ்வரன், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை அருகே, விருகல்பட்டி - வல்லக்குண்டாபுரம் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம், உடுமலை.

