/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேர்காணல் முடிந்து 9 மாதம் ஆகியும் பணி நியமனம் இல்லை; ரேஷன் கடை விண்ணப்பதாரர்கள் தவிப்பு

ADDED : ஜூலை 30, 2025 08:42 PM
அன்னுார்; நேர்காணல் முடிந்து, ஒன்பது மாதங்கள் ஆகியும், முடிவு வெளியாகாததால், ரேஷன் கடை விண்ணப்பதாரர்கள் தவிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 300க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளன. இதனால் ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள ரேஷன் கடையில் ஒருவரே விற்பனை செய்தல் மற்றும் எடை போடும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 129 விற்பனையாளர்கள் மற்றும் 70 எடையாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 5000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பதாரர்களுக்கு கடந்த நவம்பில் நேர்முகத் தேர்வு நடந்தது. டிச. 25ம் தேதி தேர்வு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகவில்லை. நியமன ஆணையும் வழங்கவில்லை.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் சிலர் கூறுகையில்,' அருகில் உள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஊழியர்கள் தவிக்கின்றனர். பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். அரசு விரைவில் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்,' என்றனர்.