தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் வெளிச்சமில்லை விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

ரோட்டில் வெளிச்சமில்லை விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

ரோட்டில் வெளிச்சமில்லை விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்


UPDATED : ஆக 26, 2026 03:51 PM

ADDED : ஆக 26, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 03:51 PM ADDED : ஆக 26, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில், போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக தற்போது, போக்குவரத்து துவங்கப்பட்டு, கோமங்கலம்புதுார் அருகே சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். போதிய தெருவிளக்கு வெளிச்சம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. நேற்று முன்தினம், ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்று, கோவை திரும்பிய சுற்றுலா வேன், 21 பேருடன் வந்தது.

புளியம்பட்டி அருகே போதிய வெளிச்சம் இல்லாததால் சுற்றுலா வாகனம், மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர். போதிய வெளிச்சம் இல்லாத சூழலில் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்க அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us